![]() ![]() ![]() |
![]() சந்திரபாபு தம்பு
ஆசிரியர் சந்திரபாபு 2004 ம் ஆண்டு இன்சுடர் யோகா மையத்தில் குரு இரமணன் அவர்களிடம் யோகாசனம் பயில ஆரம்பித்தார். இவர் யோகாசனம் பயில வரும்போது கடுமையான ஒவ்வாமை( )நோயினால் பாதிப்படைந்திருந்தார். இவர் தொடர்ந்து குருவின் வழிகாட்டலில் ஒவொருநாளும் பயிற்சிகள் செய்து தனது ஒவ்வாமை நோயில் இருந்து முழுமையாக விடுபட்டார். ஆதன் பின்பு யோகாசனத்தின் மேல் மிகவும் நம்மிக்கை கொண்டார் அத்தோடு இவர் தொடர்ந்து இன்சுடர் யோகா மையத்தில் குருவின் வழிகாட்டலில் பயிற்சியில் ஈடுபடும் வேளையில் இவரது தொடர்ச்சியான பயிற்சியையும் குரு நம்பிக்கையையும் குரு விசுவாசத்தினையும் கண்டுணர்ந்த குரு இரமணன் அவர்கள் ஆசிரியருக்கான பயிற்சிகள் அளித்தார் இப்போது குருவின் வழிகாட்டலில் குருவின ;ஆசிர்வாதத்துடன் இன்சுடர் யோகா மையத்தின் ஆசிரியராக கடமையாற்றுகின்றார். |