Featured Events & Programs


Banner


Banner
Class Info

இன்சுடர் யோகா மையம்

இன்றைய வாழ்க்கை முறை மனிதனுக்கு மனக்குழப்பம், மனக்கவலை, மனப்பதட்டம் என்பவற்றை ஏற்படுத்துகின்றது. இதனால் மனிதன் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நோய்களுக்கு ஆழாகின்றான். இன் நிலையிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் முன்னேற, யோகப்பயிற்சி துணைசெய்கின்றது. யோகம் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான, உற்சாகமான வாழ்க்கையை அளிக்கிறது.

யோகப்பயிற்சியானது ஆசனங்கள், பிராணாயாமம், தியானம் இவைகளை உள்ளடக்கிய அட்டாங்க யோகமாக அமைகிறது. யோகப்பயிற்சி மனிதனின் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக்கொண்டுவரத் துணைபுரிகின்றது. யோகப்பயிற்சியின் மூலம் ஆரோக்கியம், மனஅமைதி, மனமகிழ்ச்சி, கற்பனைவளம் போன்ற பலவற்றைப் பெற முடியும.

தினமும் யோகம் பயில்வதன் மூலம் அதிஉச்ச ஆரோக்கியத்தை அடைவது மட்டுமல்லாது,ஆரோக்கியம் குறைந்த உடலைக்கூட ஆரோக்கியம் உள்ளதாக மாற்றமுடியும். எமது யோகாநிலையமாகிய இன்சுடர் யோகா நிலையத்தில் கடயோகம் பயிற்றுவிக்கப்படுகின்றது. கடயோக முறையைப் பயில்வதன்மூலம் உடலைத் தூய்மைப்படுத்தி, அதனுள் இருக்கும் மூளை, இருதயம், நுரையீரல், முள்ளந்தண்டு, கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள், சிறுகுடல், பெருங்குடல், மலசலவாசல், நாடிகள், சக்கரங்கள் போன்ற உறுப்புக்கள் சரியாக இயங்கி, மரணம் எய்தும் காலம் வரை மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடிகின்றது.