Featured Events & Programs


Banner


Banner
Class Info

சிறுவர்களும் யோகாவும்

தற்காலத்தில் காணப்படும் வாழ்க்கை முறை சிறுவர்களின் மனதிலும் உடலிலும் பலதரப்பட்ட மாற்றங்களை உருவாக்குகின்றது. இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட சீரற்ற உணவுமுறை, ஒழுங்கற்ற பழக்கவழக்கங்கள் ஆகியன அடிப்படைக் காரங்களாக அமைந்துள்ளன.

யோகாசனக்கலையை இல்லறவாழ்வில் ஈடுபடாதவர்களும், வயது முதிர்ந்தோரும் மட்டும் தான் பழக முடியும் என்ற தப்பான கருத்து மக்களிடையே காணப்படுகின்றது. அவ்வாறன்றி சிறுவர்கள் யோகக்கலையைக் கற்றுப் பயன் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தையும், மனவளத்தையும் சிறுவர்கள் பெறுவதற்கு அடித்தளமாக யோகக்கலை உதவுகின்றது.

சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்:

  • சிலசிறுவர்கள் புத்திசாலித்தனம் உள்ளவர்களாக இருப்பார்கள். அதே சிறுவர்கள் பல வேளைகளில் புத்திசாலித்தனம் அற்ற வேலைகளில் ஈடுபடுவார்கள்.
  • சிலர் சோம்பல்தனமாகவும் சிலர் அதி சுறுசுறுப்பானவர்களாகவும் காணப்படுவார்கள்.
  • சில சிறுவர்கள் அதிக நேரம் படிப்பார்கள் ஆனால் அவர்களால் படித்தவற்றை மனதில் உள்வாங்கி வைத்து வெளிக்கொண்டு வர முடியாமல் சிரமப்படுவார்கள். மூளை சீராக வேலை செய்யாமையே இதற்குக் காரணமாகும்.
  • சிலசிறுவர்களுக்கு நாளம் இல்லாச் சுரப்பிகள் சரியாக வேலைசெய்யாமையினால் வயதிற்கு மீறிய செயல்களில் ஈடுபடுவார்கள் உதாரணமாகபுகைப்பிடித்தல் மதுஅருந்துதல் பாலியல் செயற்பாடுகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
  • சிறுவர்களது வீட்டுச்சூழல் ஒழுங்கற்ற பழக்கவழக்கங்கள் உணவு முறை போன்றன வயதிற்கு மீறிய உடல் பருமன் அதி சுறுசுறுப்பு(hyper) போன்றவற்றை ஏற்படுத்தும்.

மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளைத் தவிர்த்து சிறுவர்களை ஆளுமை உள்ளவர்களாக உருவாக்க யோகாசனம் உதவிபுரிகின்றுது.