Featured Events & Programs


Banner


Banner
Class Info

அனுபவங்கள் - பெரியவர்கள்

 

கார்த்திகை 2014

அனைவருக்கும் வணக்கம் எனக்குப் பல காலமாக யோகாப் பயிற்சி செய்ய வேண்டுமென்கின்ற ஆசை இருந்தது. ஆனால் அது ஒரு பொழுதும் கைகூடவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு நான் மூக்கினால் சுவாசிப்பதைக் குறைத்து என்னை அறியாமலே வாயினால் கூடுதலாக சுவாசித்தேன். நாள் முழுக்க வாயினால் சுவாசித்த காரணத்தால் மாலை நேரங்களில் எனது உள் நாசி காய்ந்து ஒரு வித வலி உணரக்கூடியதாய் இருந்த்து. அந்த நேரத்தில் எனது நண்பியும் சகோதரியுமானவர் தான் யோகாப் பயிற்சி போக உள்ளதாகவும் என்னையும் கூட வரும்படி சொன்ன போது உடனே சம்மதித்து பயிற்சி முடிவில் அந்த அக்காவிற்கு அங்கே பயிற்சி கொடுத்த விதம் திருப்தி கொடுக்கவில்லை. தான் முன்னர் ஒரு ஆசிரியரிடம் போனதாகவும் அங்கே மறுபடியும் போகலாமென விபரம் சொன்னதன் பேரில் ரமணன் யோகா ஆசிரியரிடம் வந்து பயிற்சி பெற ஆரம்பித்தேன். ரமணன் ஆசிரியர் யோகாப் பயிற்சி கொடுப்பதில் தன்னை மிகவும் அற்பணித்துள்ளார். அவரது முறையானதும், தரமானதுமான பயிற்சியில் எனது உள்ளம் உடல் இரண்டிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படலாயிற்று. மூச்சுப் பயிற்சிகளை மேற் கொண்டதால் இப்பொழுது நான் முழுக்க முழுக்க மூக்கினால் சுவாசிக்கிறேன். மனதில் இடைக்கிடை ஏற்படும் அழுத்தங்கள் எல்லாம் சமாளிக்கக் கூடியதாகவும் உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் தொடர்ந்து வைத்திருக்க்க் கூடியதாகவும் உள்ளது. மனதிலும் உடலிலும் புத்துணர்ச்சியை உணரக் கூடியதாகவும் என்னையே நான் இன்னும் அதிகமாக நேசிக்கும் படியாக எனது உடல் மன நிலமைகளில் நிறைய நேர்மறை மாற்றங்கள் அமைந்துள்ளது. நல்ல ஆசிரியரிடம் யோகாப் பயிற்சி செய்ய ஏற்படுத்திக் கொடுத்த சந்தர்ப்பத்திற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும், நல்ல முறையில் கண்ணியமும், கட்டுப் பாடும், அர்ப்பணிப்புமோடு பயிற்சி கொடுக்கும் யோகாக் குருவான ரமணன் ஆசிரியருக்கும் பணிவான வணக்கங்கள்.
ஓம் சாந்தி... சாந்தி....சாந்தி.....

Oct 2013

வணக்கம்

எனது பெயர் ஜோண்சன் ஞானப்பிரகாசம் நான் கடந்த நான்கு வருடங்களாக இன்சுடர் யோகா மையத்தில் குரு இரமணனிடம் யோகாசனம் பயின்று வருகிறேன் யோகாசனம் செய்வதன் மூலம் உடலில் எல்லா உறுப்புக்களும் சத்தியை பெற்றுக்கொள்கின்றது. ஆரம்பத்தில் சில ஆசனங்களை என்னால் செய்யமுடியவில்லை காரணம் எனது தசைகள் விட்டுக் கொடுக்கவில்லை. தொடர்ந்து குருவிடம் பயிற்சி பெற்று ஆசனங்களை செய்து வந்ததால் இப்பொழுது எனக்கு இலகுவாக இருக்கின்றது அத்தோடு மனமும் அமைதியாக இருக்கின்றது. எனவே உடல் ஆரோக்கியமாக விழங்குவதோடு நலமுடனும் மனவளமுடனும் வாழ யோகப்பயிற்சிகள் எனக்கு பல அனுபவங்களை கற்றுத்தந்துள்ளது.

ஒவொரு ஆசனங்களையும் செய்யும் போது அவ் ஆசனங்கள் எந்த உறுப்புக்களுக்கு எவ்வாறு நன்மை அளிக்கின்றது என குரு இரமணன் அவர்களால் விளக்கங்கள் வழங்கப்படும் யோகாசனம் செய்வதன் மூலம் என்றும் இளமையாகவும் புத்துணர்ச்சியோடும் நோய்களை எதிர்த்தும் மன அமைதியுடனும் வாழ முடியும்

நான் சனி ஞாயிறு நாட்களில் ஆசிரியர் இரமணனிடமும் கிழமை நாட்களில் வீட்டிலும் தொடர்ந்து யோகாசனம் செய்து வருகிறேன். மேலும் நான் எனது குருவிற்கு நன்றியை மிகவும் மகிழ்ச்சியுடன் தெருவித்துகொள்கிறேன்.

நன்றி
ஜோண்சன் -ஞானப்பிரகாசம்


July 2013

நாம் வாழ்வதற்கு பிராணவாயுவின் அவசியத்தை மருத்துவரீதியாகவும் உள் உறுப்புக்களின் செயற்பாடுகளையும் விளக்கி ஒவொரு ஆசனங்களுகக்கும் விளக்கங்கள் அளித்து அதனால் அடையும் நன்மைகளை ஆசிரியர் விளக்கி கற்பிப்பது இன்சுடர் யோகா மையத்தில்தான் கேட்கக்கேட்க செவிக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை ஊட்டுகிறது.

இளமையில் இன்சுடர் யோகாவை பயிலவில்லை என்று கவலைதான்.கற்றிருந்தால் இன்னும் இளமையாக வாழமுடியும்

ஓராண்டு பூர்த்தி செய்த மாணவன்
R.R. Mylvaganam


April 2013

நான் 2009 முதல் குரு இரமணன் ஆசிரியரிடம் யோகா பயின்று வருகிறேன். பொதுவாக வயது கூடும்போது மனநிலையும் உடல்நிலையும் குறைந்து கொண்டு செல்லும் ஆனால் என்னுடைய அனுவத்தில் யோகா பழக ஆரம்பித்த பிறகு என்னுடைய மனநிலையிலும் உடல்நிலையிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. மனநிலையை அளக்க முடியாது உணரத்தான் முடியும் என்னான் உணரக்கூடியதாக இருக்கிறது உடல்நிலையை பரிசோதனை மூலம் அளந்து கொள்ளலாம் அந்த வகையில் எனது கூடாத கொலஸ்ரோலின் அளவு குறைந்திருக்கிறது மற்றைய அளவுகளான குருதி அமுக்கம் சீனியின் அளவு ஈரலின் தொழிற்பாடு சிறுநீரகத்தின் தொழிற்பாடு எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது.

January 2013

எனது பெயர் ஆ.சிவசிதம்பரம் (சிவா) நான் ஒரு வருடமாக ரமணன் ஆசிரியரிடம் யோகா பயின்று வருகிறேன். நான் ஆரம்பிக்கும் போது இருந்த உனது உடல் நிலைக்கும் இப்போதுள்#3021;ள உடல் நிலையையும் எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். காரணம் எனது உடல் மிகவும் இலகுவாக குனிந்து வளையக் கூடியதாக உள்ளது. சக்கரையின் அளவு கட்டுப்பாட்டில் உள்ளது

எனது உடல் தசைகளில் நல்ல வலிமை காணப்படுகிறது எனது சுவாசத்தில் கூடிய மாற்றத்தை உணரக் கூடியதாக உள்ளது அத்துடன் உடல் பருமனும் குறைந்துள்ளது உடல் நிலையும் மனநிலையும் முன்பு இருந்ததைவிட அமைதியாக உள்ளது.

ஆ.சிவசிதம்பரம் (சிவா)


January 2013

எனது பெயர் பாலகுமார் நான் கடந்த மூன்று ஆண்டுகளாக குரு திரு.ரமணன்ஆசிரியரால் நடத்தும் இன்சுடர் யோகா மையத்தில் யோகாசனம் பயின்று வருகிறேன் யோகா பழகுவதற்கு முன்பு நெடுஞ்சாலை வாகன விபத்தால் எனக்கு முதுகெலும்பு பிரச்சனை மற்றும் அதனால் ஏற்பட்ட பக்க விளைவு நோய்களால் அவதிப்பட்டேன். ஆசிரியருடன் தொடர்பு கொண்டு ஒழுங்காக யோகா வகுப்பு சென்று பயில தொடங்கினேன் உடம்பில் மாற்றங்கள் தெரிந்தன உடல் ஆரோக்கியம் மன அமைதி பயமின்மை சந்தோசம் எனக்கு கிடைத்தது. மகிழ்ச்சியுடன் தொடர்ந்து யோகாசனம் பயின்று வருகிறேன்

இப்படிக்கு
பா. பாலகுமார்


LDL (bad cholesterol) December 2011 4.32, December 2012 - 3.42

குரு இரமணன் மிகவĬ#3009;ம் அர்ப்பணிப்பு உணர்வுடன் மாணவர்களுக்கு
கற்றுத்தருவார். யோகாவைப் பற்றியும் உடலைப் பற்றியும் மிகவும் ஆழ்ந்த அறிவு உள்ளவர். ஓவ்வொரு ஆசனமும் செய்யும் போது எப்படி செய்ய வேண்டும் எப்படி செய்ய கூடாது ஒவ்வொரு ஆசனத்தினாலும் உடலின் எந்த உறுப்புக்கள் எவ்வாறு பயனடையும் போன்ற விடையங்களை எல்லாம் சொல்லித்தருவார் தனியாக ஆசனம -;மல்லாது உணவுப்ழக்கவழக்கங்கள் பற்றியும் உடலில் சக்தியை எப்படி சேமிப்பது போன்ற பலவிடயங்களையும் விளக்கிக் கூறுவார் என்ன காரணத்திற்காகவும் வகுப்பை ரத்து செய்வதோ பிந்தி வருவதோ முந்தி முடிப்பதோ கிடையாது
"he is an intelligent knowledgeable selfless and dedicated guru"
என்னுடைய 47வது வயதில் தான் நான் யோகாசனம் கற்க ஆரம்பித்தேன் இதற்கு முதல் எந்த உடற்பயிற்சியும் செய்த அனுபவம் கிடையாது இன்று தலைகீழாக (சிரசாசனம்) ஒற்றைக்காலில் (ஏகபாதாசனம்) முதுகில் (சர்வாங்காசனம்) முழங்கைகளில் (மயுராசனம் வயிற்றில் (தனுராசனம்) நிற்கக் கூடியதாக இருப்பதற்கு குரு இரமணன் அவர்களின் வழிகாட்டுதலே காரணம் நான் இதை ஏன் கூறுகிறேன் என்றால் தற்செயலாக இக்கட்டுரையை வாசிக்கும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்தால் உங்களுடைய வயதையோ முன் அனுபவத்தைப் பற்றியோ சிந்திக்காமல் நீங்களும் யோகாசனம் பழக ஆரம்பிக்கலாம்

"if i can do it any body can do it"

குரு இரமணன் அவர்களுக்கு குருவணக்கம் கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.

குகன் சாரங்கபாணி


 

தை 2010

யோகா அனுபவம்

எனது பெயர் தயாபதி சிவா கடந்த சில வருடமாக இன்சுடர் யோகா மையத்தில் எனது ஆசிரியர் திரு இரமணன் அவர்களிடம் யோகா பயின்று வருகிறேன்.

யோகா வரும் முன்பு எனது உடம்பின் நிலைமை சரியாக முடியாமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அதன் காரணமாக எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட முட்டு மற்றும் ஒவ்வாமை(யுடடநசபல) செமிபாடின்மை அத்தோடு பசியின்மையும் ஏற்பட்டது வைத்தியரிடம் போன போது அவர் எல்லா பரிசோதனைகளையும் செய்து எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை நல்ல சத்தாக சாப்பிட வேணும் இரும்புச்சத்து குறைவு என்று சொன்னாh. மனதில் தைரியம் இல்லாத எனக்கு இந்த யோகா நிலையத்தை பற்றி அறிந்தேன். ஆசிரியரிடம் எனது நிலையை சொன்னேன் ஆசிரியர் யோகாசனப் பயிற்சியை படிப்படியாக எனது உடல் நிலைமைக்கு ஏற்றபடி அவர் சொல்லித்தந்தார்.அதுமட்டுமன்றி சாப்பாட்டு முறையையும் நோய்க்கு ஏற்றபடி விளக்கினார்.எனக்கு சில மாதங்களில் நல்ல வித்தியாசம் தெரிந்தது எனக்கு உடம்பில் ஒரு சக்தி வந்தது போல் இருந்தது அதோடு மூச்சுப்பயிற்சியும் தியானமும் சொல்லித்தந்தார்.

பின்பு எனது கணவர் பிள்ளைகளும் கூடவே என்னோடு வந்தார்கள் எனது கணவர் மிகவும் விருப்பத்தோடு ஆசிரியர் இரமணன் அவர்களிடம் யோகாசனம் பயின்று வருகிறார். எமது ஆசிரியரின் நற்பண்பும் எல்லோரையும் மனம் தளர விடாமல் தனது முயற்சியால் எல்லா ஆசனத்தையும் சிறு கண்டிப்புடன் கற்றுத்தருகிறார். யோகா முடிந்து வீடு செல்லும் போது சந்தோசமும் மன அமைதியும் அடைகிறோம் எமது ஆசிரியர் இரமணன் அவர்களிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

இப்படிக்கு
தயாபதி சிவா

 
 

தை 2010

யோகா அனுபவம்

எனது பெயர் கே.சந்திரசேகர்(சேகர்) எனக்கு தோள் மூட்டுவலிஇ கைஇ கால் உழைவு கழுத்தில் வலி இப்படி நான் இந்த நோய்களில் இருந்து அவதிப்பட்டேன்..மருந்துகள் எடுத்தும் சுகம் வரவில்லை. பின்னர் எனது நண்பன்தான் இன்சுடர் யோகா மையத்தின் தொலைபேசி இலக்கத்தினை தந்தார் நான் யோகா ஆசிரியருடன் கதைத்து நான் தொடர்ந்து யோகா வகுப்ப#3007ற்கு போய் வந்து கொண்டு இருக்கம் பொழுது என் உடம்பில் மாற்றங்கள் தெரிந்தன. எனக்கு இருந்த நோய்களில் இருந்து விடுபட்டு நல்ல சுகமாகவும் ஆரோக்கியமாகவும் மனதில் அமைதி சந்தோசம் எனக்கு கிடைத்தது.நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

இப்படிக்கு
கே.சந்திரசேகர்

 

ஆடி 2009

எனது பெயர் மாலினி செந்தில்நாதன். நான் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக திரு. இரமணன் யோகா ஆசிரியரிடம் யோகா பயின்று வருகின்றேன்.

நான் ஒரு அலுவலகத்தில் வேலை செய்து வருகின்றேன். நான் நடப்பதைத் தவிர வேறு உடற்பயிற்சி எதுவும் முன்பு செய்வதில்லை. ஆனால் நான் தற்போது யோகாப் பயிற்சி பயிலத் தொடங்கிய பின்பு தான் எமது உடல் உறுப்புக்கள் அனைத்தையும் சரியான முறையில் தொழிற்பட வைக்க யோகாப் பயிற்சி எவ்வாறு உதவுகிறது என்பதை அறிந்தேன். அதையும் அனுபவபூர்வமாக அறிந்துள்ளேன்.

எனக்கு முன்பு கொஞ்சக் காலமாகவே இடுப்பு வலி இருந்து வந்தது. இதற்கு நான் எப்போதும் physiotherapy செய்வேன். அதன் மூலமாக அதைக் குறைக்க முடிந்ததே தவிர இல்லாமல் போக்க முடியவில்லை. ஆனால் யோகப்பயிற்சி மூலம் சுலபமாக அதைப் படிப்படியாகப் போக்க முடிந்துள்ளது. இது எனது அனுபவமாகும்.

தற்போது ஏதாவது உடல்வலி ஏற்பட்டால் அவ் உறுப்புக்கு என்ன யோகப்பயிற்சி உள்ளதோ அதை ஆசிரியரிடமிருந்து அறிந்து அதைச் செய்வதன் மூலம் அதை நானே குணப்படுத்த முடிகிறது.

முன்பெல்லாம் தெரிந்தவர்கள் எல்லோரும் யோகா செய்யச் சொல்லுவார்கள் ஆனால் இது நல்ல பயிற்சி என்று எனக்கு தெரியும் ஆனால் எனக்கு யோகா செய்யச் சந்தர்ப்பம் வரவில்லை. சந்தர்ப்பவசமாகத்தான் எனக்கு இந்த வகுப்புக்குப் போகக் கிடைத்தது. தற்போது நான் அதை ஒரு நல்ல சந்தர்ப்பமாகக் கருதுகிறேன்.

இதைத் தொடங்குவது கடினம். ஆனால் தொடங்கினால் விடமாட்டீர்கள். ஆசிரியர் எப்போதும் சொல்லுவார் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய நேரமாவது ஒதுக்கி எங்களால் முடிந்த சில ஆசனங்களையாவது ஒவ்வொரு நாளும் செய்யுமாறு. ஆனால் அது தான் கொஞ்சம் சிரமமான விடயம். ஆனால் அதைச் செய்வோமேயானால் எமது உடம்பிற்கு மிகவும் நல்லது. அதை நடைமுறைப்படுத்துவதற்#3021குத் தான் நான் தற்போது முயற்சிசெய்து வருகிறேன்.

நீங்கள் யோகா ஒழுங்காகச் செய்து வந்தால் வைத்தியரிடம் செல்லத் தேவையில்லை என்பது எனது கருத்து.

யோகாவை ஒழுங்காகச் செய்வோம். உடம்பை வளப்படுத்துவோம்.

நன்றி.
மாலினி செந்தில்நாதன்.


ஆடி 2009

“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

“வளர்க யோக புகழ் பார்ரெல்லாம்”

வணக்கம்

நான் இரண்டு வருடங்களாக வாரத்தில் இருநாட்கள் இன்சுடர் யோகா பயிற்சி நிலையத்தில் யோகாசனம் கற்று வருகின்றேன் அத்துடன் எனது மனைவி என் இருபிள்ளைகளும் யோகாசனம் அதே இடத்தில் கற்று வருகின்றனர். இங்கு பிரதான குருவாக திரு இரமணன் அவர்கள் யோகப்பயிற்சியாளராக இருக்கின்றார் திரு இரமணன் யோக கலையில் மிகவும் தேர்ச்சி பெற்ற மெஞ்ஞான விஞ்ஞான அறிவுகளையும் மிகவும் பண்பான கண்டிப்பான குருவாக இருப்பதாக நான் உணர்கிறேன் அவர் பல பண்பான அறிவான மாணவர்களை உருவாக்கி இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

நான் செய்யும் வேலையானது உடல்ரீதியாக மிகவும் கடுமையானது நீண்டகாலமாக உயர் இரத்த அழுத்தம் எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் நான் செய்யும் வேலை எனக்கிருக்கும் நோயைகட்டுப்படுத்த நான் பாவிக்கும் வீரியமான மாத்திரைகளினால் ஏற்பட்ட பக்கவிளைவு நோய்களாக மூட்டு வலி நெஞ்சு கொதித்தல் போன்றவைகளால் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஆனால் நான் யோகாசனம் கற்க தொடங்கிய பின்பு மூட்டு வலி நெஞ்சு கொதித்தல் போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைய தொடங்கி தற்போது அவை முற்றாகவே குணம் அடைந்து விட்டன. நான் தற்போதும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மாத்திரைகள் பாவிக்கின்றேன். யோகாசனம் தொடர்ந்து செய்வதன் மூலம் வருங்காலங்களில் மாத்திரை பாவிக்காமல் கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனது மனைவியும் ஆஸ்மா நோயிற்கு inhalers பாவித்து வருகின்றார். ஆனால் அவர் யோகாசனம் கற்பதால் தற்போது inhaler பாவிப்பதை குறைத்துக் கொண்டு வருகின்றார். வருமுன் காப்போம் என்று எமது மதிப்பிற்கு உரிய குரு தொடர்ச்சியாக வலியுறுத்துவார். ஆகையினால் எல்லோரும் யோகா என்னும் அற்புதக்கலையை கற்பதனால் மனதும் உடலும் நலம் பெற்று வளமாக வாழலாம் என்பதே எனது கருத்தாகும்.

அன்புடன்

சீலன்
Ambius
Changing the Landscape of Business
Interiors across North America.

ஆடி 2009

யோகா அனுபவம்

எனது பெயர் சின்னப்பு நல்லையா வயது 76 தொழில் இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகஸ்தர் எனக்கு இலங்கையில் இருக்கும் போது ஆஸ்மா இருந்துது. குளிர்காலத்தில் ஜப்பசி தொடக்கம் தை மட்டும் உள்ள காலத்தில் மூச்சு விடமுடியாமல் அவஸ்தைப்படுவேன் மருந்து எடுத்தாலும் வருத்தம் குறையமாட்டாது. மூக்கினாலும் வாயினாலும் சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறுவேன் உயிர் போவது போல் தவிப்பேன்.

இவ்விடம் கனடா வந்தபின் யோகா பயிற்சி செய்யத் தொடங்கினேன். படிப்படியாக சுகம் கண்டுள்ளேன். 90வீதம் சுகமடைந்துள்ளேன்.

சென்ற வருடம் இருதயத்தை பரிசோதித்துப்பார்த்தேன் இருதயம் நன்றாக வேலை செய்வதாக சொன்னார்கள் எல்லாவற்றுக்கும் யோகா செய்தமையால் சுகதேகியாக உள்ளேன் எனது இடது முழங்காலில் எலும்பு தேய்ந்தமையால் நடக்க முடியவில்லை பின் சத்திரசிகிற்சை செய்யும் படி சொன்னார்கள் அதை நான் விரும்பவில்லை பின் யோகப்பயிற்சி செய்வதினால் சுகமடைந்துள்ளேன். எனது கழுத்து எலும்பு தேய்ந்த படியால் கழுத்து நோ ஏற்பட்டுள்ளது. இதற்கு சத்திரசிகிற்சை செய்ய முடியாது என்று சொன்னார்கள் யோகா செய்யும் படி சொன்னார்கள் அதன் படி யோகா செய்து வருகிறேன்.

எனவே எனது அனுபவத்தின் படி யோகாவை முறைப்படி ஒவொரு நாளும் செய்து வந்தால் சுகதேகியாக வாழலாம்.

இங்ஙனம்

சின்னப்பு நல்லையா

ஆடி 2009

யோகா அனுபவம்

நல்லையா இராஜேஸ்வரி வயது 67 எனக்கு இலங்கையில் இருக்கும் போது சலரோகம் ஏற்பட்டது மருந்து எடுத்து வந்தேன் இவ்விடம் வந்து யோகப்பயிற்சி செய்ய தொடங்கிய பின் படிப்படியாக நோய் குறைந்து மருந்து எடுக்காமல் சுகமாக உள்ளேன்.

மலச்சிக்கல் மூட்டுவாதம் அஜீரணம் ஏற்பட்டது இது எல்லாம் யோகா அப்பியாசம் மூலம் சுகமடைந்துள்ளேன் ஆனால் ஒவொரு நாளும் யோகா செய்ய வேண்டும்.

எமது யோகா ஆசிரியர் திரு இரமணன் அவர்களிடம் எமது நோய்களை சொன்னால் அவர் அதற்குரிய அப்பியாசங்களை சொல்லித்தருவார்.அவற்றை நாங்கள் மூச்சு செய்கை மனதை ஒரு நிலைப்படுத்துதல் மூலம் செய்ய வேண்டும் இதன் படி செய்தால் சுகமடையலாம் இதனால் சுகதேகியாக இருக்கின்றேன்.

வணக்கம் பல

இங்ஙனம்

ந.இராஜேஸ்வரி.


ஆடி 2009

எனது வயது 46 நான் ரொறன்றோவில் வாழ்ந்து வருகிறேன் எட்டு வருடங்களுக்கு முன்பு நான் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த வேளையில் ஏற்பட்ட விபத்தினால் மிகவும் பாதிப்படைந்திருந்தேன். என்னை முதுகுவலி முழங்கால்வலி நெஞ்சுநோ தலையிடி என்பன மிகவும் வருத்தியது வைத்தியர் எனக்கு பல வகையான மருந்துகளைத் தந்தார் therapy க்கும் பல வருடங்களாக சென்று வந்தேன் எதுவும் எனக்கு பயனளிக்கவில்லை மருந்துகள் யாவும் வீரியம் கூடியவை ஆகையால் சில பக்கவிளைவுகளும் ஏற்பட்டது.

இவற்றால் நான் மனமுடைந்திருந்த வேளையில் உலகத்தமிழர் பத்திரிகையில் இன்சுடர் யோகா மையத்தின் அதிபர் திரு இரமணன் ஆசிரியரின் விளம்பரத்தை பார்த்தேன் நான் ஆசிரியருடன் தொடர்பு கொண்டு என் பிரச்சனைகள் எல்லாவற்றையும் விளக்கி கதைத்த பின்பு 2008 மார்கழி மாதம் நான் யோகா வக#3009ப்பிற்கு போக ஆரம்பித்தேன். முதல் ஒரு மாதமாக எனக்கு கஸ்ரமாக இருந்தது.பின்பு ஆசிரியரின் அறிவுரையை பின்பற்றி ஒழுங்காக யோகா வகுப்பிற்கு சென்று யோகா பயின்று வந்தேன். ஒவொரு வகுப்பும் முடிந்து வரும் போது உடம்பு மிகவும் சுகமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பதை உணர்கிறேன். இப்பொழுது எனது உடல் நிலையில் மாறுதல் தென்படுகிறது. இப்போது நான் மருந்துகள் எதுவும் பாவிப்பதில்லை உடல் உபாதைகள் குறைந்து விட்டது மிகவும் புத்துணர்ச்சியுடனும் மன உறுதியுடனும் இருக்கின்றேன்.

இவ் யோகா பயிற்சியினால் நான் மிகவும் சிறந்த பலனை அடைந்துள்ளேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.

நன்றி
இரட்ணா


ஆடி 2009

வணக்கம். எனது பெயர் வசந்தா நடராசன். கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இன்சுடர் யோகா மையத்தில் குரு இரமணன்ஜீ அவர்களிடம் யோகாசனம் பயின்று வருகின்றேன். என்னோடு எனது கணவர் எனது மகன் ஆகியோரும் யோகாசனம் பயின்று வருகின்றார்கள். குறிப்பாக எனது மகனைப்பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். 2000 ஆம் ஆண்டு கணனிப் பொறியியலாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்த எனது மகன் கார் விபத்தின்மூலம் தனது ஞாபகசக்தியை இழந்ததோடு உடல் மன ஆரோக்கியத்தை இழந்தவராகக் காணப்பட்டார். நவீன மருத்துவ வசதிகள் இவரைப் பழைய நிலைக்குக் கொண்டுவரமுடியாத நிலையிலே காணப்பட்டன. இவருடைய ஆரோக்கிய நிலை காரணமாக பல யோகா மையங்கள் இவரை மாணவராக ஏற்றுக்கொள்ளத் தயங்கின.

இச்சூழ்நிலையில் இன்சுடர் யோகாமையத்தின் நிறுவனர் ஆகிய குரு இரமணன்ஜீ அவர்களைத் தற்செயலாக வெளியீட்டு விழா ஒன்றிலே சந்திக்க நேர்ந்தது. அதன் பிĪ#2985் அவருடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாகவும் அவரிடம் பயிற்சி பெற்ற பலரது அனுபவங்களைக் கேள்விப்பட்டும் எனது மகனை இன்சுடர் யோகா மையத்திலே பயிற்றுவிக்க எண்ணங் கொண்டபொழுது மனமுவந்து மாணவராக ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர் யோகாசனப்பயிற்சி பிரணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி தியானம் பிரார்த்தனை மற்றும் தகுந்த உணவுமுறைகள் என்பவற்றின்மூலம் எனது மகனின் உடல் உள ஆரோக்கியத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். இன்று எனது மகன் தன்னம்பிக்கையோடு தொடர்ந்தும் குரு இரமணன்ஜீ அவர்களிடம் யோகாசனப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இன்சுடர் யோகா மையத்திலே சேர்ந்த காலத்தில் எனது மகன் கைகால்களை அசைக்க முடியாது துன்பப்பட்டார். அப்பொழுது குரு இரமணன்ஜீ அவர்கள் மகனுடைய உடல்நிலைக்கேற்ற தகுந்த யோகாசனப்பயிற்களைத் தெரிவுசெய்து பயிற்சியளித்து அதன்மூலம் உடல் அசைவுகளிலே மாற்றத்தை ஏற்படுத்தினார். அதன் பின்னர் படிப்படியாக முன்னேறி தற்பொழுது சகமாணவர்களுடன் இணைந்து இன்சுடர் யோகா மையத்திலே கற்பிக்கப்படும் சகல யோகாசன முறைகளையும் மகிழ்வோடு கற்று வருகின்றார்.

யோகாசனப்பயிற்சிகளைப் பயிற்றுவிக்கும் குரு இரமணன்ஜீ அவர்கள் அன்பு கருணை பொறுமை இவற்றோடு யோகாசனப் பயிற்சிகளைக் கற்பிக்கும் நேரத்தில் கண்டிப்பும் கொண்டவர். யோகாசனப் பயிற்சிகளை மூச்சோடு இணைந்து சரிவரச் செய்ய வேண்டும் என்பதில் அக்கறையும் கண்டிப்பும் கொண்டவர். அவரவர் ஆரோக்கியத்திற்கேற்றவாறு யோகாசனப் பயிற்சிகளைத் தெரிவு செய்து பயிற்றுவிப்பவர். குரு இரமணன்ஜீ அவர்கள் எனது மகனது ஆரோக்கியமற்ற நிலையை நன்குணர்ந்து அதற்கேற்ற பயிற்சிகளில் ஈடுபடுத்தி அவர்மீது மேலதிக கவனம் செலுத்தி தவறுகளைத்திருத்தி முறையான பயிற்சிகளைக் கொடுத்து பிரணாயாமப்பயிற்சிகளில் ஈடுபடுத்தி எனது மகன் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியோடும் தன்னம்பிக்கையோடும் தொடர பேருதவி புரிந்துள்ளார்.

தற்பொழுது ஏனைய மாணவர்களைப்போல குரு இரமணன்ஜீயால் பயிற்றுவிக்கப்படும் அத்தனை யோகாசனப் பயிற்சிகளையும் சர்வசாதாரணமாகச் செய்வதற்கு இன்சுடர் யோகா மையத்தின் பயிற்சி முறைகளே காரணமாகும். பயிற்சி நேரத்தில் அமராது ஒவ்வொருவரையும் கவனித்து பிழைகளைத் திருத்தி உரியமுறையில் ஆசனங்களைச் செய்வதற்கு உதவுகின்றார். இக்காரணத்தினால் ஆரம்பகாலங்களில் கடுமையாகக் காணப்பட்ட சர்வாங்காசனம் விபரீதகரணி கலாசனம் தனுர் ஆசனம் போன்ற பல ஆசனங்களை மிக இலகுவாக எனது மகனால் செய்ய முடிகின்றது.

யோகாசனமும் மூச்சுப்பயிற்சிகளும் இன்சுடர் யோகா மையத்தில் நிகழும் பிரார்த்தனைகளும் எனது மகனின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. எதற்குமே லாயக்கற்றவராக நவீன மருத்துவத் துறையால் கருதப்பட்ட எனது மகன் இன்று திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தந்தையாகியுள்ளார். இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்திய பெருமை கருணையோடும் பொறுமையோடும் கட்டுப்பாட்டோடும் யோகாசனங்களைக் கற்பிக்கும் குரு இரமணன்ஜீ அவர்களுக்கே உரியது. எனது மகன் தொடர்ந்தும் யோகாசனப்பயிற்சிகளை இன்சுடர் யோகா மையத்திலே மேற்கொண்டு வருகின்றார்.

எனது மகனோடு நானும் எனது கணவரும் யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். யோகாசனம் கற்றபின்னர் எனது கணவரின் நீரழிவு வியாதி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வயதிற்கு மீறிய உடல் ஆரோக்கியத்தோடு சோர்வின்றி உற்சாகமாப் செய்யும் பணிகளில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது.

மகனை முன்னிறுத்தி யோகாசனத்திலே ஈடுபட்ட நான் இன்று ஆன்மீகரீதியிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உணருகின்றேன். உடலளவில் யோகாசனப் பயிற்சிகளினால் உடல் ஆரோக்கியமாகக் காணப்படுகின்றது. எவ்வாறான கடின வேலையையும் செய்து முடிப்பதற்குரிய தேகாரோக்கியத்தை யோகாசனப் பயிற்சிகள் வழங்கியுள்ளன. அதேநேரத்தில் மகனது விபத்தால் ஏற்பட்ட மனஅழுத்தம் மகிழ்ச்சியின்மை மறைந்து வருவதை மகிழ்வாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையை யோகாசனமும் அதனுடன் தொடர்புடைய தியானம் மற்றும் பிரார்த்தனைகளும் ஏற்படுத்தியுள்ளன.

யோகாசனப்பயிற்சிகளினால் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களோடு மனநிலையிலும் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்சுடர் யோகா மையத்திலே பயின்ற தியான முறை மனக்கட்டுப்பாட்டிற்கும் மனஒருமைப்பாட்டிற்கும் பெரிதும் உதவுகின்றது. ஒரு கருமத்தைச் செய்யுமுன் மனதை ஒருமைப்படுத்தி தியானத்தில் ஈடுபட்ட பின்னர் அந்தக் கருமத்தைச் செய்யும்பொழுது மனநிறைவும் உள்ளுணர்வின் மூலம் தெளிவும் ஏற்படுவதை உணர முடிகின்றது. இவற்றின் மூலம் சோர்வற்ற மனநிலை ஆர்வத்துடன் செயலாற்றும் உணர்வு மனமகிழ்ச்சி என்பவற்றோடு தேவை தேவையற்றவை என்பவற்றைப் பிரித்தறியும் கட்டுப்பாட்டுணர்வும் யோகாவினால் ஏற்பட்ட முக்கிய நிலையாக உணர முடிகின்றது.

ஆயகலைகள் அறுபத்தி நான்கு. இக்கலைகளுள் எதனைக் கற்பதாக இருந்தாலும் குருபக்தி குரு விசுவாசம் நம்பிகை கடவுள் பக்தி என்பவை அவசியமானது. இவற்றை மனதிலே வளர்த்துக் கொண்டு யோகாசனப் பயிற்சிகளில் ஈடுபடுவது தீராத நோய்களைத் தீர்த்து உடல் மன வளங்களை இலகுவில் ஏற்படுத்தும். இத்தகைய அற்புதமான நிலையை ஏற்படுத்த குரு இரமணன்ஜீ அவர்கள் இன்சுடர் யோகா மையத்தை நிறுவி எங்களைப் போன்ற பலருக்கு யோகாசனப் பயிற்சிகளை வழங்கி உதவி வருகின்றார்கள்.

வணக்கம்.

 

கார்த்திகை 2009

வணக்கம். நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இன்சுடர் யோகா மையத்தில் குரு இரமணன் ஆசிரியரிடம் யோகாசனம் பயின்று வருகிறேன். எனக்குப் பத்து வருடங்களாக நீரிழிவு நோய் உண்டு. அத்துடன் சில வருடங்களாக எனது இரண்டு கைகளின் மணிக்கட்டுகளில் சரியான நோ ஏற்பட்டது. அது படிப்படியாகக் கூடிக்கொண்டே போனது. இரவில் சரியாகத் தூங்க முடியாது. நித்திரை குழம்பும். கைகள் இரண்டும் விறைத்து விடும். அத்துடன் சரியான வலியும் இருக்கும். தொலைபேசி பேசும்பொழுதுகூட கை விறைத்து விண்விண்ணென்று வலிக்கும். மரக்கறி வெட்ட முடியாது. கடைக்குப் போனால் சாமான்கள் தூக்க முடியாது. வீட்டு வேலைகள் செய்ய முடியாது. பல நாட்கள் நோ நிவாரண மாத்திரைகள் பல பாவித்தும் பலனளிக்கவில்லை. இது காப்பல்ரணல் சின்றம் (carpel tunnel syndrome) என்றும் சத்திரசிகிச்சை செய்தால் குணம் வரும் என்றும் வைத்தியர் கூறினார். அதனால் முதலில் வலது கை மணிக்கட்டில் சத்திரசிகிச்சை செய்தேன். இடது கைக்கு சத்திரசிகிச்சை செய்யாமல் பல மாதங்கள் பிசியோத்திறப்பியும் (physiotherapy), கைறோதிறப்பியும் (chiropractic treatment) செய்து பார்த்தும் பலனளிக்கவில்லை.

பின்னர் குரு இரமணன் ஆசிரியர் அவர்களின் யோகா வகுப்பில் சேர்ந்தேன். படிப்படியாக வலியும் நோவும் குறையத்தொடங்கியது. இப்போ சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை. எனது இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் நன்கு குறைந்து கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கெல்லாம் முதலில் கடவுளுக்கும் குரு இரமணன் ஆசிரியர் அவர்களுக்கும் எனது நன்றியையும் வணக்கத்தையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

யோகா வகுப்பிற்கு முதுகு நோ, தோள்களில் வலி, நாரிப்பிடிப்பு, ஆஸ்மாத் தொல்லை, நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், தலைச்சுற்றுப் போன்ற பலதரப்பட்ட நோய் உள்ளவர்கள் பலர் வருவார்கள். ஆசிரியர் அவரவர்களுக்குத் தேவையான ஆசனங்களை ஒவ்வொருவரின் வயதிற்கும் நோய்க்கும் ஏற்ப இலகுவான பயிற்சிகளில் தொடங்கிப் படிப்படியாகச் சொல்லித் தருவார். சில நாட்களின் பின் எங்கள் உடம்பு எல்லா ஆசனங்களும் செய்யக் கூடிய நிலைக்கு வந்து விடும். வகுப்பில் சிறுவர் முதல் எழுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வரை பலர் இருக்கிறார்கள். ஆசிரியர் யோகாசனப் பயிற்சிகளைச் சொல்லித்தரும் பொழுது மிகவும் பொறுமையுடனும், கண்டிப்புடனும், பயிற்சிகளை மூச்சோடு சேர்ந்து சரியாகச் செய்ய வேண்டும் என்பதில் அக்கறையுடனும் இருப்பார். ஓவ்வொரு ஆசனத்தின் பின் சற்று ஓய்வு தருவார். அந்த நேரத்தில் அடுத்த ஆசனத்தின் பலன்களை விரிவாகக் கூறுவார். வகுப்பு தொடங்கி முடியும்வரை ஒரு இடத்தில் உட்காராமல் எல்லோரையும் கவனித்து, அவர்கள் விடும் தவறுகளைத் திருத்துவார். சில நாட்களில் விளக்கப் படங்களைப் போட்டுக் காட்டுவார். அதனால், நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்ற விளக்கத்துடன் ஆசனங்களைச் செய்வோம்.

ஆசிரியர் சொல்வதைக் கேட்டுப் படிப்படியாக ஆசனங்களைச் செய்ய ஆரம்பித்தால் எங்களை அறியாமல் ஆசனங்கள் எங்கள் வாழ்க்கையோடு இணைந்துவிடும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. நோய்க்குச் சிகிச்சை என்றில்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் யோகாசனப் பயிற்சிகள், பிரணாயாமம், தியானம் ஆகியவை நிச்சயமாக நல்ல பலனைத் தரும். தினமும் பத்து நிமிடங்கள் யோகாசனப் பயிற்சி செய்வது, எப்போதாவது இரண்டு மணி நேரம் செய்வதைவிடச் சிறந்தது. மனம் தான் யோகா என்று ஆசிரியர் அடிக்கடி கூறுவார்.

குரு இரமணன் ஆசிரியர் அவர்களின் இச்சேவையைப் பலரும் பெற்று ஆரோக்கியமாகவும், மன அமைதியுடனும் பல்லாண்டு வாழ்வார்களாக! அத்துடன் இன்சுடர் யோகாமையம் மென்மேலும் வளர்ச்சியடையவும் குரு இரமணன் ஆசிரியர் அவர்களும், அவரின் குடும்பத்தினரும் சகல செல்வங்களும் பெற்று நலமுடன் வாழவும் கடவுள் அருள்புரிவாராக!

அன்பே சிவம்.
சிவனேஸ்வரி (சிவம்) சின்னராஜா.

 

கார்த்திகை 2009

இன்சுடர் யோகாசனக் கலைக்கூடத்தில் யோகாசனம் செய்து நான் அடையும் நன்மைகள்.

இன்சுடர் யோகா மையத்தில் 5 மாதங்களாக தவறாமல் ஒவொரு நாளும் சென்று யோகா பழகி வருகிறேன். இவ் 5 மாதங்களில் 8 இராத்தல் நிறை குறைந்துள்ளது. இரத்த அழுத்த மாத்திரைகள் பாவிப்பதை நிறுத்தி விட்டேன். சக்கரை வியாதிக்கு பாவிக்கும் இன்சுலினை 6 புள்ளிகளால் குறைத்துள்ளேன். வருடக்கணக்காய் இருந்த மனநோய் அரைவாசி குறைந்துள்ளது. மனஇ உளஇ உடல் நலம் மிகவும் உன்னத நிலையில் உள்ளது.

"தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்"

இப்படிக்கு,
தங்கள்
அ.குலசிங்கம்