Featured Events & Programs


Banner


Banner
Class Info

அனுபவங்கள் - சிறுவர்கள்

 

யோகாவின் அனுபவங்கள்

எனது பெயர் நிரஞ்சன் எனக்கு பன்னிரெண்டு வயது இருக்கும் போது நான் யோகா வகுப்பிற்கு வந்து சேர்ந்தேன் எனது தாய் தந்தையருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். முதலில் இரமணன் ஆசிரியர் எனக்கு குருவாக இருந்தார். பின்பு அவரது பாரியார் எனக்கு குருவாக வந்து எங்களுக்கு யோகப்பயிற்சி தந்து வருகின்றார். நான் யோகாவில் நிறைய ஆசனங்களும் கடவுள் தியானமும் அறிந்தேன். தியானத்தின் மூலம் எனது மனதை ஒரு நிலைப்படுத்திக் கொள்வேன்.ஒவ்வொரு நாளும் காலையில் தியானம் செய்வேன் யோகா எனக்கு பலவிதத்திலும் நல்ல உதவியாக இருந்தது.

எனது உடல் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் அமைந்துள்ளது உணவுப் பழக்கங்களும் நன்கு ஒழுங்கு படுத்தி சத்தான உணவுகளை அளவாக உண்ணப் பழகினேன். கல்வி அறிவிலும் மிகவும் முன்னிலையில் இருக்கிறேன் பாடசாலையில் எனது நற்பழக்கம் கருதி எனக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. நாங்கள் எங்களுக்கு தெரிந்த பல குடும்பங்களுக்கும் யோகாசனம் பற்றிக் கூறி அவர்களும் யோகா வகுப்பிற்கு வருகின்றனர். நான் வாழ்க்கையில் தொடர்ந்தும் யோகா செய்வதாக இருக்கிறேன். எனது அக்காவும் மிகவும் ஆர்வத்துடன் யோகாவிற்கு போய் வருகிறார் நாங்கள் கருத்தில் கொள்வது எல்லோரும் யோகா பயில்வது மிகவும் சிறந்தது.

நன்றி

நிரஞ்சன் ரஜீவன்