Featured Events & Programs


Banner


Banner
Class Info

தியானம்

தியானம் என்பது எமது உடம்பில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையின் நோக்கங்களை அடைவதற்கு வழிவகுக்கின்றது.

ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமன்றி அனைவரும் தியானப்பயிற்சியை மேற்கொள்ளலாம். கல்வி மற்றும் தொழில்களில் முழு ஈடுபாட்டோடு ஈடுபடுவதற்குத் தியானம் துணை புரிகின்றது.

தியானப்பயிற்சி குருவால் பலவிதமான முறையில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. தியானப்பயிற்சியை ஒருவர் பழக தொடங்கியதும் அவரால் அவருடைய சக்கரங்களை சரியான முறையில் வேலை செய்விக்க முடியும். சக்கரங்களை நாம் எமது ஊனக் கண்ணால் பார்க்க முடியாது. ஞானக் கண்ணால் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் தியானத்தின் மூலம் உணரும் போதும் சக்கரங்கள் வேலை செய்யத்தொடங்கும்.

இன்றைய வாழ்க்கை முறையால் ஏற்படும் மன அழுத்தம், மனப்பதட்டம், கோபம், கவலை என்பன இயல்பாகவே மனிதனை ஆட்கொள்கின்றது. இவ்வாறான மனநோய்கள் ஏற்பட்டதும் மருந்துகளை எடுக்கின்றோம். மருந்துகள் மனதில் ஏற்படும் நோயின் அறிகுறியை மாற்ற உதவுமே ஒழிய நோய் வருவதற்கான காரணங்களுக்குத் தீர்வாகாது. ஆனால் ஒருவர் தியானப்பயிற்சி நோய்கள் வருவதற்கான காரணங்களை வேருடன் அழிக்க உதவுகின்றது.